பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகம்
பழங்குடியினர் ஆராய்ச்சி நிறுவன அருங்காட்சியகம் என்பது இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தின் தலைநகரான ராஞ்சியில் அமைந்துள்ள அருங்காட்சியகம் ஆகும். இந்த அருங்காட்சியகத்தில் கல் சிற்பங்கள் மற்றும் சுடுமட்சிலை கலைப்பொருட்களின் அரிய தொகுப்பு உள்ளது. அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் இனவியல் பொருள்கள், மாநிலத்தில் வசிக்கும் பழங்குடி சமூகங்களின் வரலாறு மற்றும் வாழ்க்கை முறையைச் சித்தரிக்கின்றன. பழங்குடியினர் குறித்து ஆய்வினைத் தொடரும் மாணவர்களுக்கு இந்த அருங்காட்சியகம் முக்கியமான கற்றல் மையமாக விளங்குகிறது.
Read article